பிரான்ஸ் அதிபர் 4 நாட்கள் பயணமாக இன்று இந்தியா பயணம்!

Friday March 09, 2018

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் 4 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளுடன் இன்று இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகையின் போது இருநாட்டு பொருளாதாரம், அணு சக்தி ஒத்துழைப்பு, கடல் சார் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
 
எம்மானுவேல் மேக்ரான் வரும் ஞாயிற்றுக்கிழமை (11-ம் திகதி), பிரதமர் மோடியுடன் 121 நாடுகள் பங்கேற்கும் சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின் 12-ம் திகதி (திங்கள்கிழமை) உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூரிய ஒளி உற்பத்தி ஆலையை தொடங்கி வைக்கிறார்.
 
எம்மானுவேல் மேக்ரான் வரும் திங்கள்கிழமை வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.