பிரான்ஸ் அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம்

May 18, 2017

பிரான்ஸின் புதிய ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் (Emmanuel Macron) புதிய அமைச்சரவையில் அரைவாசி பேர் பெண்களாக இடம்பெற்றுள்ளனர். பாலின சமநிலைப்படுத்தப்பட்ட அமைச்சரவை அமைக்கப்படும் என மெக்ரோனிக் வழங்கிய தேர்தல் கால வாக்குறுதியின் படி புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 22 முக்கிய பொறுப்புகளில் சரிபாதியான 11, பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. வாள்ச்சண்டை (Olympic fencing champion) போட்டியில் ஒலிம்பிக் வெற்றியாளரான லாரா பிளிசெல் (Laura Flessel) விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பொருளாரா அமைச்சு, நீதியமைச்சு போன்ற முக்கிய அமைச்சுகளும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் பிரதமராக மாற்று கட்சியின் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
புதன் May 24, 2017

ஐ.எஸ் அமைப்பு மஞ்செஞ்ரில் வைத்த குருரமான இலக்குக்கு பின்னர் பிரித்தானியா தனது பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையை அதியுச்ச நிலைக்கு நகர்த்தியுள்ளது.