பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா!

ஞாயிறு பெப்ரவரி 26, 2017

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாட்டு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இணையத்தில் விளம்பரம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

ஒபாமா 2017 என்ற தலைப்பில் இந்த பிரச்சார விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஹவாய்யில் பிறந்த ஒபாமாவை தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்கும் வகையில் ஒரு மில்லியனுக்கு மேற்ப்பட்டவர்கள் இதில் கையெழுத்திடுவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரஞ்சு மக்கள் தீவிரப்போக்குடையவரை தெரிவு செய்ய தயாராக இருக்கிறாம். நாம்மிடம் தீவிரப்போக்குடைய யோசனை உள்ளதால் அவர்களை முன்மொழிய வேண்டும்.

தீவிர வலதுசாரி வேட்பாளரான லி பென்னை எதிர்கொள்ள ஒபாமா சரியான தெரிவாக இருப்பார். வெளிநாட்டவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த கிரகத்தின் ஜனநாயகத்திற்கு ஒரு புதிய பாடம் கற்று கொடுக்க முடியும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் வைரலாகியுள்ள குறித்த பிரச்சாரத்தில் தற்போது வரை 30,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த விளம்பரத்தை பாரிஸை சேர்ந்த நல்வர் குழு நிறுவியுள்ளது. எனினும், தற்போது வரை அவர்களை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.