பிரான்ஸ் நாட்டில் உடல் உறுப்பு தானம் கட்டாயம்!

January 05, 2017

''பிரான்ஸ் நாட்டில் அனைவரும் கட்டாயம் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்'  என்ற புதிய சட்டம் அமலாகியுள்ளது. உயிருடன் இருக்கும் போது ரத்ததானம். இறந்த பிறகு கண்தானம் என்ற கோ‌ஷம் உருவாக்கப்பட்டது. அதன்படி அது தற்போது நடைமுறையில் உள்ளது. அது தவிர மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் உறவினர்கள் அனுமதியுடன் தானம் பெற்று தேவைப்படுவோருக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டு வருகிறது.

உடல்உறுப்பு தானம் நமது நாட்டில் கட்டாய மாக்கப்படவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியாவில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவர் இறந்த பின்னர் உடல் நலத்துடன் கூடிய தகுதியான உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தேவைப்படுவோருக்கு பொருத்தப்படும்.

அதற்கு தற்போதே ஆவணத்தில் கையெழுத்து போட்டு உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரான்ஸ் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். அதற்கான புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது இந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துவிட்டது.

இறக்கும் தருவாயில் இருக்கும் நபரை டாக்டர் குழு பரிசோதித்து அகற்ற கூடய அவரது உடல் உறுப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அவர் இறந்த பிறகு உறுப்புகள் அகற்றப்படும்.

தற்போது அங்கு இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் தானம் செய்யும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உடல் உறுப்பு தானத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிகம் பேர் உள்ளனர். 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 86 ஆயிரம் பேர் இருந்தனர்.

உடல் உறுப்பு தானம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கின்றனர். அதை தடுக்கவே பிரான்ஸ் இந்த சட்டத்தை கொண்டு வந்து தீவிரமாக அமல்படுத்துகிறது. பிரான்சில் தானம் பெறப்படும் உடல் உறுப்புகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட உள்ளது.

செய்திகள்
ஞாயிறு April 30, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியோற்று 100வது நாள் பூர்த்தி விழா நேற்று பென்சன்வேனியாவில் இடம்பெற்றது.

சனி April 29, 2017

வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

புதன் April 26, 2017

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்