பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி கொலை!

புதன் ஓகஸ்ட் 15, 2018

பட்டுக்கோட்டை அருகே, பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியை எரித் துக் கொலை செய்து, பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய பொறியியல் பட்டதாரியை  காவல் துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையை அடுத்த ஒலையக் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான அழகிரி என்பவர், நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்றபோது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பியரே பொட்டியர் பெர்னாண்டோரெனே(68) என்பவ ரின் பாஸ்போர்ட், டைரி உள்ளிட்ட சில பொருட்கள் இருந்த பையைக் கண்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து, மதுக்கூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித் தார். காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் தலைமையிலான காவல் துறை , பையைக் கைப்பற் றினர். அந்தப் பையில், மதுக் கூரை அடுத்த ஆவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப் பாண்டி மகன் திருமுருகன் (29) என்பவரின் முகவரி எழுதப்பட் டிருந்த துண்டுச் சீட்டு இருந்தது.

இதையடுத்து காவல் துறை  நடத்திய விசாரணையின்போது திருமுருகன் அளித்த வாக்குமூலம்:

சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 2009 முதல் 2011 வரை பி.டெக் படித்தேன். அப்போது, மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றபோது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியரே பொட் டியருடன் பழக்கம் ஏற்பட்டது. பியரே, தமிழகம் வரும்போது என்னைத் தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். இருவரும் பல இடங்களுக்குச் சென்று வந்துள் ளோம். எங்களுக்குள் கூடா நட்பு இருந்தது.

கடந்த ஜூலை 31-ல் பியரே, சென்னைக்கு சுற்றுலா வந்தார். 5-ம் திகதி திருச்சியில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டார். மதுக்கூரில் உள்ள எங்களின் தோட்ட வீட்டுக்கு அவரை அழைத்து வந்தேன். அங்கு 2 பேரும் மது அருந்திவிட்டு தனிமையில் இருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி பியரே மயங்கி விழுந்துவிட்டார்.

அவர் உயிருடன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என உறுதி செய்ய முடியாத நிலையில், அந்த வீட்டில் உள்ள சமையலறையில் வைத்து டீசல், பெட்ரோல், பழைய டயர்கள் ஆகியவற்றைக் கொண்டு பியரேவின் உடலை எரித்தேன். எரிந்து முடிந்ததும் எலும்புகள், சாம்பல் மற்றும் எரி யாமல் கிடந்த சதைப் பகுதி களை, 3 சாக்குப் பைகளில் மூட்டை யாகக் கட்டி எடுத்துச் சென்று, மதுக்கூர்- வாட்டாக்குடி சாலை யோரம் உள்ள உக்கடை வாய்க் காலிலும், பியரேவின் பையை ஓலையக்குன்னம் கிராமத்தில் வயல் பகுதியிலும் போட்டுவிட்டு வந்துவிட்டேன் என திருமுருகன் கூறியுள்ளார்.

இதையடுத்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார் மற்றும் காவல் துறை , சாக்கு மூட்டைகளில் எரிந்த நிலையில் கிடந்த பியரே உடலின் சதைப் பகுதிகள், எலும்புகள் மற்றும் சாம்பலை கைப் பற்றி, பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வாட்டாக் குடி உக்கடை கிராம நிர்வாக அலுவலர் தனவேல் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து திருமுருகனை கைது செய்த மதுக்கூர் காவல் துறையினர், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.