பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

ஞாயிறு நவம்பர் 15, 2015

பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் நேற்று மாலை நடைபெற்ற படுபயங்கரமான மனிதநேயங்களுக்கு அப்பாற்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலில் 150ற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழவேண்டிய மனிதர்கள் இப்படியான வன்செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

இந்த மிலேச்சதனமான தாக்குதலை போரால் வலியுண்ட மக்களென்ற வகையிலும் அந்த வலியின் கொடுமையை அனுபவித்தவர்கள் என்ற வகையிலும் ஈழத்தமிழராகிய எமக்கு வேதனையையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. நாம் பிரான்ஸ் மக்களுடன் இத்தருணத்தில் கைகோர்த்து நிற்பதோடு அவர்களின் துயரத்திலும் பங்குகொள்ளுகின்றோம்.

இந்தத் தருணத்தில் பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்வதோடு பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்லாயிரம் ஈழத்தமிழருக்கு மனிதநேயத்துடன் அடைக்கலம் கொடுத்த பிரான்ஸ் நாட்டுமக்களுக்கும் அந்நாட்டுத் தலைவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரித்துக்கொள்ளுகின்றோம்.

- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவ