பிரான்ஸ் மொசல் மாநிலத்தை வந்தடைந்த ஈருருளிப் பயணம்!

செவ்வாய் செப்டம்பர் 15, 2015

தமிழினப் படு கொலைக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம், 15வது நாளான நேற்று (14.09.2015) பிரான்ஸ் மொசல் மாநிலத்தை வந்தடைந்தது.

 

மொசல் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர், சார்குமின் நகரபிதா, சார்யூனியன் நகரபிதா அவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 67 வருடங்களாக தமிழின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணையே நீதியைப் பெற்றுத் தரும் என வலியுறுத்தி 5 அம்சக் கோரிக்கைகள் கொண்ட மகஜரும் கையளிக்கப்பட்டது.

 

பிரான்ஸ் நாட்டின் ஊடகங்களான றீப்பப்ளிக் லோறான், d.n.a பத்திரிகைகளும் இவ் ஈருருளிப் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி பிரசுரித்துள்ளன. ( http://www.dna.fr/actualite/2015/09/13/a-travers-l-europe-pour-la-justice

 

சீரற்ற காலநிலையிலும் 70கி.மீ பயணித்து பால்ஸ்பூர்க்  என்னும் இடத்தில் நிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் நாளை ஆரம்பமாகும்.