பிரான்ஸ்: ராணுவ வீரர்கள் மீது கார் ஏற்றி தாக்குதல் நடத்தியவர் கைது

August 09, 2017

 பிரான்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்றவரை   காவல் துறையினர்  துப்பாக்கியால் சுட்டு மடக்கி, கைது செய்தனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று காலை ராணுவ வீரர்கள் கும்பலாக சென்று கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு காரில் வந்த ஒருவர், தான் ஓட்டி வந்த காரை நடந்து ராணுவ வீரர்கள் மீது மோதினார். இந்த திடீர் தாக்குதலில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்துகின்றனரோ என எண்ணிய அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின்னர், அந்த காரை துரத்திச் சென்று மடக்கினர். காரிலிருந்தவர்  பாதுகாப்பு படையினர் மீதும் காரை மோத முயன்றார். ஆனால், அவர்கள் அவரை  துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர்.

இதுதொடர்பாக, அவன்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை  , அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள்