பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சுடர்வணக்க நிகழ்வும் சமகால அரசியல் கலந்துரையாடலும்

நவம்பர் 07, 2017

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சுடர்வணக்க நிகழ்வும் சமகால அரசியல் கலந்துரையாடலும். 

தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக களத்திலும்  அரசியல் தளத்திலும் அயராது உழைத்த உன்னத உயிர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள். பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் உயிர்நீத்த ஏனைய 6 மாவீரர்களின் நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் சுடர்வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரவரலாற்றை  நினைவுகூரும் வகையில் வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வாளர்களால் கவிதைகள்  வழங்கப்பட்டது. 

தொடர்ந்து நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில்    சிறிலங்காவின் உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும், புவிசார் அரசியலை மையப்படுத்திய சிறிலங்காவின் வியூகங்கள்.. அதனை ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளவது எவ்வாறு? அத்தோடு தாயக அரசியல் நிலவரமும் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டிய நகர்வுகள் எனும் தலைப்புகள் தொடர்பாக தாயகத்தில் இருந்து வருகைதந்திருந்த இளஞ் சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ஆகிய திரு மணிவண்ணன் விஸ்வலிங்கம் அவர்கள் உரையாற்றினார். 

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கணக்கிலெடுக்கமால், பிரிக்கப்படாத நாடு என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் ஒற்றையாட்சி முறையிலான அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்  தமிழ்மக்களினால் நிராகரிக்கப்படும் ஒரு அரசியலமைப்பைக் காட்டி தமிழ்மக்களின் அரசியற் பிரச்சனைக்கு இது தீர்வாக அமையும் என சர்வதேச சமூகத்திற்கு சிறிலங்காவினால் காட்ட முடியாது என்பதையும் எடுத்துரைத்தார்.கலந்துரையாடலில் மக்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலலித்த வாறு    கூட்டமைப்பின்  மக்கள் விரோத போக்கை முறியடித்து   தமிழ் மக்கள் அரசியல் வேணவாவை பிரதிபலிக்கும் முகமாக தமிழர் தாயகத்தில் புதிய அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும்  வகையில் தாம் ஏனைய சில தரப்புகளுடன் கூட்டுமுயற்சியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். இறுதியாக அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ் மக்களின் விடுதலையை நோக்கி  தளராது தொடர்ந்தும்  பணியாற்றுவோம் என உறுதியெடுத்தனர்.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி நவம்பர் 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

வெள்ளி நவம்பர் 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும்.

வியாழன் நவம்பர் 16, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

வியாழன் நவம்பர் 16, 2017

நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி...

புதன் நவம்பர் 15, 2017
தமிழின அழிப்பை எதிர்கொள்ளலும், நினைவுகூரலும் என்ற தொனிப்பொருளுடன் கடந்த 04.11.2017 சனிக்கிழமை பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தால் அரசறிவியல் மாநாடு வெகு சிறப்பு
செவ்வாய் நவம்பர் 14, 2017

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு