பிரிட்டனில் தாய்மை அடைந்த முதல் ஆண்

செவ்வாய் சனவரி 10, 2017

பிரிட்டனில் பெண்ணாக இருந்து ஆணாக மாற முடிவெடுத்தவர் திடீரென அதை பாதியில் நிறுத்தி விட்டு ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஹெய்டன் கிராஸ் (20). இவர் 3 ஆண்டுகளுக்கு முன் சட்டப்படி ஆணாக மாறினார். இதற்கான அறுவை சிகிச்சையை அவர் தொடங்கினார். திடீரென தாய்மை அடைய விரும்பிய ஹெய்டன் தனது கருமுட்டையை பாதுகாக் கும்படி கேட்டுக் கொண்டார்.

இதற்கு பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மறுத்துவிட்டது. இதனால் முழுமையான ஆணாக மாறும் சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்திய ஹெய்டன் தான் தாய்மை அடைய விந்து தானம் அளிக்கும்படி சமூகவலைத்தளங்களில் கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்று ஹெய்டன் கிராஸுக்கு ஒருவர் விந்து தானம் அளித்துள்ளார். அதன்மூலம் தற்போது தாய்மை அடைந் துள்ள கிராஸ், விரைவில் ஆரோக் கியமான குழந்தையை பெற்றெடுக்கப் போகிறார். இதன்மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் பிரிட்டனின் முதல் ஆண் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.