பிரித்தானியவில் வட்டி விகிதம் 0.25 சதவீதத்திற்கு குறைத்துள்ளது.

வியாழன் ஓகஸ்ட் 04, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரித்தானியா  வாக்களித்த, ஆறு வாரங்களுக்கு பிறகு, இங்கிலாந்து வங்கி தனது முதன்மை வட்டி விகிதத்தை மிக குறைந்த அளவான 0.25 சதவீதத்திற்கு குறைத்துள்ளது.

பிரெக்ஸிட் ஏற்படுத்தியுள்ள நிலையற்றதன்மையை தொடர்ந்து பொருளாதாரத்துக்கு உத்வேகம் தர இந்த வங்கி பெரிய அளவில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் எஞ்சியிருக்கும் காலத்தில் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு பலவீனமான வளர்ச்சியால் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

வங்கி ஆளுநர் மார்க் கார்னி பேசுகையில்,நாட்டின் பொருளாதார கண்ணோட்டம் வளர்ச்சி குறித்த கணிப்புகளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மிக அதிகமான அளவு குறைக்கப்பட்ட நிலையில், ' தெளிவாகக் குறிப்பிடும்படியாக'' மாறியிருக்கிறது என்றார்.