பிரித்தானியாவில் கறுப்பு யூலை நினைவெழுச்சி நாள்

யூலை 17, 2017

கறுப்பு யூலை இனப்  படுகொலைகள் இடம்பெற்று முப்பது நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. பல அரசுகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துவிட்டன அன்றைய நிலைமைகள் அவ்வாறே இன்றும், அதே இனவெறி நோக்கில்!  அன்று சிறைக்குப்பொறுப்பாயிருந்த அதிகாரிகள்தண்டிக்கப்படவில்லை, படுகொலைகளைப் பார்த்துக் கொண்டுதடுக்க முயலாத காவலர்கள்தண்டிக்கப்படவில்லை,  நேரடியாகப்படுகொலைகளை மேற்கொண்டசிங்களக் கைதிகள்தண்டிக்கப்படவில்லை, இவைதொடர்பாக எந்தவொரு நீதிமன்றமும்கேள்வி எழுப்பவில்லை.  இனியும் கேட்பார்களா ? அந்த கேள்வியும் தொக்கியே நிற்கிறது. இதுவேஇலங்கையின் ஜனநாயகம்.

இலங்கையின்  ஆட்சிகள் மாறி மாறிஅதிகாரத்துக்கு வந்தபோதும், ஒரு அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்சிறைச்சாலைக்குள் தழிழ் கைதிகளைப்படுகொலை செய்யும் நாகரிகம் மட்டும்மாறவில்லை என்பதுவே யதார்த்தம்.

“எனது மரணதண்டனையை நிறைவேற்றமுன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப்பொருத்துங்கள். நான் பார்க்க முடியாததமிழீழத்தை என் கண்களாவதுபார்க்கட்டும்.”  என்று கூறிய அந்த விடுதலை வேங்கையின் விழிகளாக நாம் மாற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம் இதை உணர்ந்த சமூகமாக தொடர்ச்சியாக எங்கள் அரசியல் அபிலாசைகளை நாம் வாழும் தேசங்களில் உறுதியேடு எடுத்துரைப்போம்.

அந்த வகையில் , இம்முறையும் வழமைபோல் பிரித்தானியா பிரதமர் வாசத்தலத்திற்கு முன்பாக 23.07.2017, ஞாயிறு மாலை 5 மணியளவில் கறுப்பு யூலை நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டு எம்மினத்தின் படுகொலையை உலகிற்கு வெளிப்படுத்த ஒன்றிணைவீர்!!

செய்திகள்
திங்கள் January 22, 2018

சுவிஸ் நாட்டில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற தமிழர் இயக்கத்தின் தமிழ்மக்களுக்கான கலந்துரையாடல் 20.01.2018 சனிக்கிழமை ,நேற்று சுவிஸ் நாட்டின் சுக் மாநிலத்தில் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பி

திங்கள் January 22, 2018

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின். வீரவணக்க நிகழ்வு 21.01.2018 இன்று மாலை 4.00 மணிக்கு ஸ்ராஸ்பூர் பிரான்சில்...

திங்கள் January 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 இன் முதற் போட்டியாக கடந்த 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை உள்ளரங்கச் சுற்றுப் போட