பிரித்தானியாவில் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் மனோ சாவைத்தழுவினார்.

April 04, 2017

பிரித்தானியாவில் 1983ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ தேச விடுதலைப் பணிகளில் ஈடுபட்ட தேசப்பற்றாளரான மனோ என்றழைக்கப்படும் கிருஸ்ணசாமி மனோகரன் அவர்கள் சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்.

தமிழீழம் தொண்டைமானாறு பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட மனோ அவர்கள் ஏறத்தாள நான்கு தசாப்தங்களாகப் பிரித்தானியாவைத் தனது வாழ்விடமாகக் கொண்டிருந்தவர். தமிழீழ தாயகத்தை விட்டுப் பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த பொழுதும், தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும் ஆழமாக நேசித்தவர் மனோ அவர்கள். 1983 கறுப்பு யூலை தமிழின அழிப்பைத் தொடர்ந்து பிரித்தானியாவில் தமிழீழ தேச விடுதலைக்கான அரசியல் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

அன்று முதல் 2009 வைகாசி 18உடன் முள்ளிவாய்க்காலில் தமிழீழ நடைமுறை அரசின் செயற்பாடுகள் நின்று போகும் வரை தென்கிழக்கு இலண்டனில் தமிழீழ தேச விடுதலைக்கான அரசியல் பணிகளை முன்னெடுத்தவர் மனோ அவர்கள். தனக்கிருந்த குடும்பச் சுமைகளுக்கு மத்தியிலும் தேச விடுதலைக்காக அயராது உழைத்தவர். தமிழீழ நடைமுறை அரசின் செயற்பாடுகள் நின்று போன பின்னர் மனம் உடைந்து போனாலும், பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து இறுதிவரை தன்னால் இயலுமான அளவிற்கு தேசியப் பணிகளில் ஈடுபட்டவர் மனோ அவர்கள்.

தென்கிழக்கு இலண்டன் Bromley பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மனோ அவர்கள் கடந்த 03.04.2017 திங்கட்கிழமை காலை வீட்டில் இருந்து வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் வழியில் இயற்கை எய்தினார்.

மனோ அவர்களின் தேச விடுதலைப் பணிக்கு ஈழமுரசு-சங்கதி24 தலைசாய்க்கும் அதேவேளை, அவரது குடும்பத்தினரின் ஆறாத்துயரிலும் பங்கேற்கின்றது.

 

 

செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 3 ஆவது தடவையாக நடாத்திய லெப்கேணல் 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தாயகவிடுதலைக்காக கண்ணுறக்கமற்று தன்னலமற்று தொண்டாற்றிய புங்குடுதீவு மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களை 03.09.2017 அன்று நாம் இழந்துநிற்கின்றோம்.