பிரித்தானியாவுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் பதவி விலகல்!

Thursday February 22, 2018

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அமாரி விஜயவர்தன மார்ச் மாதம் 30ஆம் திகதியுடன் தனது பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, பதவி விலகல் கடிதத்தை  சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த அரசாங்கத்தில்  இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவில் ஏற்பட்ட விரிசலை சுமூகமாக்கவதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அமாரி நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன், அமாரி விஜயவர்தனவின் 2 வருட பதவிக்காலம் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.