பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் ஊடுருவ சிங்கள உளவாளி எடுத்த முயற்சி முறியடிப்பு!

செவ்வாய் சனவரி 08, 2019

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் ஊடுருவுவதற்கு சிங்கள உளவாளி ஒருவர் எடுத்த முயற்சி, அவரது தனிப்பட்ட ஒழுக்கத்தின் அடிப்படையில் அவ் அமைப்பின் நிர்வாகிகள் எடுத்த தீர்மானம் காரணமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

 

மயூரன் (அம்பலவாணர் மயூரன்) என்றழைக்கப்படும் குறித்த சிங்கள உளவாளி, கடந்த மாவீரர் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான கமல் என்பவருடன் தொடர்பு கொண்டு, தான் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும், அதற்கு முன்னோடியாக இலண்டனில் தான் நடாத்தவிருக்கும் மு.திருநாவுக்கரசு என்ற எழுத்தாளரின் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பேச்சாளர்கள் வருகை தந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

 

இதே மயூரன் என்பவரும், அவரது சகாவான திபா (தியாகராஜா திவாகரன்) என்பவரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை தமிழீழ விடுதலைப் புலிகள் கலைத்து விட்டதாகவும், அதில் எவராவது பணிபுரிந்தால் அவர்கள் தேசத்துரோகிகளாகக் கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று 2011ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அறிவித்திருந்தனர்.

 

அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் என்ற பெயரிலான சிங்கள ஒட்டுக்குழுவுடன் இணைந்து போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளையும் இவ்விரு சிங்கள உளவாளிகளும் முன்னின்று நடத்தியிருந்தனர்.

 

எனினும் தமக்கும், தலைமைச் செயலகம் என்ற ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணை ஒட்டுக்குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டுக்கு முன்னரே அக் கும்பலை விட்டுத் தாம் விலகி விட்டதாக 2018 ஐப்பசி மாதம் தனது முகநூல் பக்கத்தில் மயூரன் என்ற சிங்கள உளவாளி பதிவு செய்திருந்தார்.

Majuran-Facebook

 

ஆனால் இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் 2018 ஆடி மாதத்தில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை காட்டமாக விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் இதே சிங்கள உளவாளி எழுதியிருந்தார்.

 

Majuran-Facebook1

இந் நிலையில் கடந்த கார்த்திகை மாதம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான கமல் என்பவருடன் இவர் தொடர்பு கொண்டு, அவ் அமைப்புடன் தான் இணைந்து செயற்பட விரும்புவதாக இவர் கூறிய பொழுது, முதலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு எதிராக பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு மயூரன் என்பவர் பகிரங்கமாக அறிக்கை வடிவில் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கமல் அவர்கள் கூறியிருந்தார்.

 

இதற்குப் பதிலளித்த மயூரன் என்ற சிங்கள உளவாளி, தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையில் முன்னர் பணிபுரிந்த விநாயகம் என்றழைக்கப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களின் உத்தரவுப்படியே தான் இவ்வாறு செய்ததாகவும், அவர் கோத்தபாயவின் கீழ் செயற்பட்டது தெரிய வந்ததும் தவறை உணர்ந்து தாம் தலைமைச் செயலகம் என்ற கும்பலை விட்டு வெளியில் வந்து விட்டதாகவும் கூறினார்.

 

இது இவ்விதமிருக்க மயூரன் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பொதுமக்களால் 2011ஆம் ஆண்டில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு மேற்கொள்ளப்பட்டன.

 

அதிலும் மலேசியாவில் வாழும் இளம் தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்யப் போவதாகக் கபட நாடகமாகடி, அவரிடம் நயவஞ்சகமான முறையில் ஆபாசப் படங்களைப் பெற்று அதனை மின்னஞ்சல் மூலம் தனக்குத் தெரிந்தவர்களுக்கு மயூரன் என்பவர் அனுப்பி வைத்திருந்தார்.

Majuran-Wedding

இது பற்றி அக்காலப் பகுதியில் குறித்த பெண் வெளியிட்ட ஒலிப்பதிவு வாயிலான வாக்குமூலம் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்தது.

 

அத்தோடு குறித்த பெண்ணைத் தனது நயவஞ்ச வலையில் வீழ்த்துவதற்காக மயூரன் என்ற சிங்கள உளவாளி அனுப்பிய அவரது நிர்வாணப் படங்களும் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்திருந்தன (நாகரீகம் கருதி அப் படங்களை நாம் தவிர்க்கும் அதே வேளை, குறித்த பெண் 2011ஆம் ஆண்டு வழங்கிய ஒலிப்பதிவு ஒப்புதல் வாக்குமூலத்தினை இங்கு இணைக்கின்றோம்).

 

இந் நிலையில் மயூரனின் தனிப்பட்ட ஒழுக்கம் பற்றி ஆழமாக ஆராய்ந்த பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகிகள், ஒழுக்கம் - கட்டுப்பாடு இன்றி இயங்குவோரை தமது அமைப்பிற்குள் இணைப்பதில்லை என்ற முடிவை எடுத்தாக அவ்வமைப்பின் நிர்வாகிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் சங்கதி-24 இணையத்தளத்திற்கு அறியத் தந்துள்ளன.

 

இது இவ்விதமிருக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் ஊடுருவுவதற்குத் தான் எடுத்த முயற்சி மண்கவ்விய நிலையில் மீண்டும் தலைமைச் செயலகம் என்ற ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணை சிங்கள ஒட்டுக்குழுவுடன் இணைந்து பகிரங்கமாக இயங்கத் தொடங்கிய மயூரன் என்ற இந்த சிங்கள உளவாளி, அங்கு நடைபெற்ற போட்டி மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் தான் ஈடுபட்ட நிழற்படங்களையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

 

Majuran

Mathan

அத்தோடு தனது ஊடுருவல் முயற்சி தோல்வி கண்ட நிலையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மீது மீண்டும் சேறு பூசும் நடவடிக்கைகளில் மயூரன் என்ற சிங்கள உளவாளி இறங்கியுள்ளார்.

Thiba

 

இது பற்றித் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகி ஒருவர் சங்கதி-24 இணையத்திற்குக் கருத்துத் தெரிவிக்கையில், தனிப்பட்ட ஒழுக்கத்தின் அடிப்படையில் ஒழுக்கக் கேடான ஒருவரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் இணைய விடாமல் தடுத்ததன் மூலம் சிங்கள புலனாய்வுத்துறை மேற்கொண்ட ஊடுருவலைத் தாம் வெற்றிகரகமாக முறியடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

 

Majuran