பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் - தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு!

May 13, 2018

இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழிப்பாகிய முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறுவதற்கு ஏற்பாடாகியிருக்கின்றது.

தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், தொழிற்கட்சியின் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அவர்களின் அனுசரணையில் வரும் 16.05.2018 புதன்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தின் ஒரு பகுதியான Portcullis House இல் அமைந்திருக்கும் Boothroyd Room எனும் மண்டபத்தில் இந் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பைக் காத்திரமான முறையில் விசாரணை செய்வதற்கு ஏதுவான பன்னாட்டு நீதி விசாரணைப் பொறிமுறையை நிறுவுதல், தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு வழிவகை செய்தல், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை விடுவித்தல் ஆகிய விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடாகியிருக்கும் இந் நிகழ்வில் பங்கேற்று அதற்கு வலுச்சேர்க்குமாறு பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளைத் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு அழைக்கின்றது.

 

 

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....