பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல்!

ஞாயிறு மே 08, 2016

பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் எதிர்வரும் 10.05.2016 செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல் நடைபெற இருக்கின்றது.

மாலை 6:00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9:00 மணி வரை நடைபெறும் இவ் ஒன்றுகூடலில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த சாட்சிகள், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பன்னாட்டு விவகார அரசறிவியலாளர்கள் உட்பட பலர் உரையாற்றுகின்றனர்.

முதற்தடவையாக பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறும் இந் நினைவு ஒன்றுகூடலில் பங்கேற்போம்.

ஒன்றுகூடல் நடைபெறும் இடம்: Attlee Suite, Portcullis House, The Houses of Parliament, Westminster, London.

Westminster நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஒன்றுகூடல் நடைபெறும் இடம் அமைந்துள்ளது.

பாதுகாப்புச் சோதனைகளைக் கருத்திற் கொண்டு மாலை 5:30 மணிக்கு ஒன்றுகூடல் நடைபெறும் இடத்திற்கு சமூகமளிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.