பிரித்தாளும் தந்திரத்துக்கு நாங்கள் பலிக்கடாவாக மாட்டோம்!

April 21, 2017

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாளும் தந்திரத்துக்கு நாங்கள் பலிக்கடாவாக மாட்டோம் என, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

 படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி, படை முகாமுக்கு முன்பாக கேப்பாப்பிலவு மக்கள் நடத்தி வரும் போராட்டம் 51 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

 போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்படுமெனவும் தகவல் வெளியானது. எனினும், “எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது. கோரிக்கை. 

அவ்வாறு முழுமையாக விடுவிக்கப்படாது விட்டால் போராட்டம் தொடரும்” என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, “படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட்டத்தை மேற்கொள்கின்ற போது, எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு பல சதி முயற்சிகள் நடைபெறுகின்றன” என அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எங்களிடையே பிரிவை ஏற்படுத்தும்நோக்கில் பகுதி பகுதியாக விடுவிக்கப்படும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அவரின் பிரித்தாழும் தந்திரோபாயத்துக்கு நாங்கள் ஒரு போதும் பலிக்கடாவாக மாட்டோம். எங்களது ஒருமித்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தை மேற்கொள்ளுவோம்” என்று, அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

செய்திகள்
திங்கள் May 21, 2018

அன்றாட பொருண்மியத்தினை மேம்படுத்தும் நோக்கோடு 12 குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்களால் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,