பிரேசில் சிறையில் 60 கைதிகள் பலி

செவ்வாய் சனவரி 03, 2017

பிரேசில் சிறையில் நடந்த பயங்கர வன்முறையில் 60 கைதிகள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசிலின் அமேசோனஸ் மாநிலம் மனாஸ் நகரில் உள்ள சிறையில் அளவுக்கதிமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, சிறையில் இரு போதை கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக பரவியது. கைதிகள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். பலரின் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டன.

கைதிகளை வெட்டி கொலை செய்து, சடலங்களை சிறையின் சுவரில் தொங்கவிட்டனர். பலர் தப்பி ஓடினர். நேற்று காலை வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வன்முறையில் சுமார் 60 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் கூறி உள்ளனர். தப்பியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.