பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 ஆண்டுகள் சிறை!

யூலை 13, 2017

ஊழல் மற்றும் பண முறைகேடு செய்ததற்காக பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாவுக்கு 9 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 2003 முதல் 2010 வரை அதிபராக பதவி வகித்தவர் லூயிஸ் இனாசியோ லுலா. இவரது பதவிக்காலத்தில் ஊழல் மற்றும் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும், 9 1/2 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்திகள்