பிறக்கும் புதிய  ஆண்டே வருக!

திங்கள் டிசம்பர் 31, 2018

பிறக்கும் புதிய 
ஆண்டே வருக
புதுப்பொலிவோடு 
வருக உன்னை இரு 
கரம் கொண்டு 
வரவேற்கிறோம் 
ஏனெனில் உனக்கு 
பொறுப்புக்கள் அதிகம் 
மூன்று தசாப்தமாக 
வீறுகொண்ட வேங்கை 
மறவரின் தாயாக 
மீட்ப்புப் போரை பல
வல்லாதிக்க சக்திகளை 
கொண்டு அது வெறும் 
உள்நாட்டு போரென
சிறுமைப்படுத்தி 
பல இலட்ச
உயிர்களை கொன்று 
முள்ளிவாய்க்காலில் 
போர் முடிந்ததாக 
சொல்லி எம்மை 
முடக்கிப்போட்டார்கள் 
அந்த வலியின் முதல் 
தசாப்த நினைவு நாளை 
முடித்து வைக்கவும் 
இதுவரை ஒரு 
இலக்கத்தில் 
இருந்த நினைவு 
நாளைஇரு 
இலக்கம் கொண்டு
ஆரம்பிக்கவும் புத்தாண்டே 
நீ வருகிறாய் 
ஆண்டுகள்தான் 
எமை கடந்து 
செல்கிறதே தவிர
எமக்கு ஒரு விடிவும் 
இல்லை மாண்டவர்கள் 
எண்ணிக்கை இன்னும் 
தெரியாது அதற்க்கு
விசாரணைகள் ஏதும் 
இல்லை காணாமல் 
போனோர் காணாமலே 
போய்விடடார்கள் போலும் 
கண்டுதர யாருமில்லை 
உலக நாடுகளோ 
கண்மூடிக்கொண்டது 
தமிழ் தலைமைகளோ 
பாவம் சிறுவயதில் சங்கீத 
கதிரை விளையாடவில்லை 
போலும் மக்களின் அபய 
குரலை சங்கீதமாக 
மாற்றி கதிரை சண்டை 
போடுகிறார்கள் 
கைவிடப்பட்டதோர் 
இனமாக தினமும் 
கண்ணீரோடு போராட்டம் 
பிறக்க போகும் 
ஆண்டிலாவது விடிவு 
வருமா காத்திருக்கிறோம் 
நீயும் ஒரு சபதம் 
கொண்டு
பிறப்பெடுத்து வா 
தீர்வோடு,,,,,,

றொப்