பிறந்த நாளில் ரசிகர்களை குஷிப்படுத்திய ஓவியா!

Monday April 30, 2018

தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய ரசிகர்களுக்கு நடிகை ஓவியா, அவர்களை உற்சாகப்படுத்தி குஷிப்படுத்தி இருக்கிறார். ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ஓவியா, தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு’ அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.

சமீபத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ஓவியாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ராகாவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளான நேற்று தன்னுடைய ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடி இருக்கிறார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்திருக்கிறார். மேலும் வீடியோ வடிவிலும் பதிலளித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். பல ரசிகர்களும் ஓவியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நெகிழ வைத்துள்ளார்கள்.