புகைப்பிடித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்திய குரங்கு!

Thursday March 08, 2018

இந்தோனேசியாவின் பாண்டுங் மிருகக்காட்சி சாலையில் உள்ள மனித குரங்கு பார்வையாளர் வீசிய சிகரெட்டை எடுத்து மனிதர்களை போல் பிடித்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள பாண்டுங் மிருகக்காட்சி சாலையில் ஓசன் என்ற பெயரில் மனிதக் குரங்கு ஒன்று உள்ளது. இங்கு எடுக்கப்பட்ட காணொளி  இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த காணொளியில் பார்வையாளர்களில் ஒருவர் குரங்கு இருந்த இடத்திற்கு சிகரெட்டை தூக்கி வீசுகிறார். அதனை கையில் எடுத்த மனிதகுரங்கு வாயில் வைத்து மனிதர்களை போல் புகைப்பிடிக்கிறது. இது பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதையடுத்து, மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் மற்றும் சிகரெட்டை உள்ளே வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் புகைப்பிடிப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. புகைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தோனேசியா உள்ளது குறிப்பிடத்தக்கது.