புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்!

Thursday December 07, 2017

ஏற்கனவே கூறியபடி புகையிரத என்ஜின் சாரதிகள் வேலை நிறுத்தத்தை இன்று அதிகாலை தொடங்கியுள்ளனர். உதவி சாரதிகளைப் பணியில் இணைத்துக்கொள்ளும் நடைமுறைகளில் உரிய அதிகாரிகள் மாற்றங்களைக் கொண்டுவரும்படி கோரியே இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் மாத்தறை, காலி, சிலாபம், ரம்புக்கனை ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் வேலை நேர புகையிரதங்கள் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன என்று புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.