புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து ஜனநாயக அணி

Thursday October 11, 2018

மதிப்புக்குரிய சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே தமிழ் தேசியத்தை நேசிக்கும் புங்குடுதீவு பிரதேச தேசபக்த மக்களே!!!

தமிழீழ தேசத்தில் இன்றும் திட்டமிட்ட இனவழிப்பும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் சிதைக்கப்பட்டு வரும் செயல்களும் சிங்கள அரசால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அரசின் பிரதிநிதியாகவும் வட மாகாண அரசின் செயற்பாடுகளை முடக்கக் கூடிய வகையில் பதவியில் அமர்த்தப்பட்ட, சிங்கள அரசின் பிரதிநிதியாக பதவி வகிக்கும் வடமாகாண ஆளுநரான றெயினோல்ட் குறே அவர்களை அவர்களை தற்போது பதவியிலுள்ள புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து நிர்வாகிகள் ஒருசிலர் அழைத்துள்ளனர். இந்நிலைப்பாடானது அனைத்து புங்குடுதீவு மக்களின் நிலைப்பாடு அல்ல. இது ஒன்றியத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடுமல்ல. தமிழீழ தேசத்தின் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் பேருதவி வழங்கிய புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமானது 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலங்களில் தமிழ் தேசியத்திற்கு விரோதமான சிங்கள அரசின் கைக்கூலிக்கும்பலின் கைக்குச் சென்றுள்ளதே இவ்வாறான தற்போதைய செயற்பாடுகளுக்கு காரணம். எனவே தேசியத்தை நேசிக்கும், குறிப்பாக தமிழீழ தேசியத்தலைவருக்கு பெண்கொடுத்த பூமியான, சுவிஸ் வாழ் புங்குடுதீவு தேசபக்த மக்களாகிய நாம் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து ஜனநாயக அணியை ஆரம்பித்துள்ளோம்.

ஆகவே எதிர்வரும் 11.10.2018 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண ஆளுநருடனான சந்திப்பானது சிங்கள அரசுடன் கூடிக்குலாவும் ஒரு சில தனிப்பட்ட சிங்கள கைக்கூலிகள் எடுத்த தனிப்பட்ட முடிவு என்பதை இவ் அறிக்கையின் ஊடாக அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

அத்துடன் அனைத்து நாடுகளிலும் இருக்கும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியங்கள் இவ்வாறான துரோகிகளை நிராகரித்து இதுபோன்ற துரோக செயல்களுக்கு துணை போகவேண்டாம் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வேளையில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஒரு சிலரின் இவ்வாறான முடிவுகளுக்கு ஒட்டுமொத்தமாக பகிரங்க மன்னிப்புக் கோருவதுடன் புங்குடுதீவைச் சேர்ந்த புத்திஜீவிகளும், வர்த்தகர்களும், மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஒன்றியங்களும், ஆன்மீக அமைப்புகளும், கலைசார் நிறுவனங்களும் தமிழ்த்தேசிய விடுதலைக்காக பல ஆயிரம் உயிர்களையும், பாரிய பங்களிப்புகளையும் வழங்கிய எமது புங்குடுதீவு மண்ணுக்கு களங்கம் ஏற்படுத்திய இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை கண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தொடர்ந்தும் எமது ஒன்றியம் துணை நிற்கும் என்பதையும் உறுதியாக கூறுகின்றோம்.

இவ்வண்ணம்

நிர்வாகம்
புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து - ஜனநாயக அணி

    றமணன்: 078 800 59 51
    சதானந்தன்: 078 851 87 48
    சந்திரபாலன்: 079 856 72 97
    ஐங்கரன்: 079 193 37 60