புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை நாளை நாடாளுமன்றத்திற்கு!

Thursday January 10, 2019

புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று நாளை (11) நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது. 

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று இவ்வாறு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. 

புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை குறிப்பிட்டு வழங்கியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த யோசனை அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. 

இது சம்பந்தமான யோசனை நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.