புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சனி ஜூலை 07, 2018

இமானுவேல் சேகரனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இமானுவேல் சேகரனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

மாவட்டப் பொருளாளர்கள் ஆறுமுகம், சின்னஅப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இம்மானுவேல் சேகரன் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்கக் கோரியும், குரு பூஜை விழாவை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்கக் கோரியும் முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் அர்ச்சுணன், பழனிவேல், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.