புதிய மைல்கல்லை தொட்ட டி.இமான்!

December 31, 2017

தனது இனிய இசையின் மூலம் ரசிகர்களை கட்டுப்போடும் மந்திரத்தை தெரிந்திருக்கும் இசையமைப்பாளர் டி.இமான் அவரது 100-வது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

`கிருஷண்தாஷி' என்ற சின்னத்திரை சீரியல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான்.  தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களுக்கு இசையமைத்து வந்த இமான், விஜய் நடித்த `தமிழன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து `விசில்', `6'2' `ரெண்டு' என தொடர்ந்து பலடவேறு படங்களுக்கு இசையமைத்த இமான், `மைனா' படத்தின் மூலம் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டார். 

`மைனா' படத்திற்கு பின்னர் அவரது இசையில் வெளியான பெரும்பாலான படங்களின் பாடல்கள் ஆல்பம் ஹிட்டானது. இந்நிலையில், இமான் 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்டிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படம் தான் இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்ட இமானுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. 

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 4-ஆம் திகதி நடைபெற இருக்கிறது. 

செய்திகள்