புன்னக்குடா பகுதியில் தாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை

ஒக்டோபர் 18, 2017

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் இளம் தாயெனவும் கணவன் வெளியூரில் வசிப்பதாகவும் தெரிய வருகின்றது. இச் சம்பம் இரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் காவல்துறையினர் சம்பம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிளவிலேயே தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

கழுத்தறுத்துக் கொலை செய்யபட்டவர்கள் ராஜா மதுவந்தி 26 வயதெனவும் மதுசன் வயது 11 எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தீபாவளி தினமான இன்று இக் கொடூரச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் அப் பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், ம

திங்கள் யூலை 16, 2018

இலங்கையில் இன்று ஜனநாயகம் இழக்கப்பட்டு சர்வாதிகாரமும் இராணுவஆட்சியும் தலைதூக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள் யூலை 16, 2018

சீரற்ற காலநிலை காரணமாக மும்பாய் மற்றும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு பயணிகள் விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்டுள்ளது.