புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது?

December 01, 2017

கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்காளதேசம் வழங்கியுள்ளது. வங்காள மொழியில் ‘ஒகி’ என்றால் கண் என்று அர்த்தம்.

உலக வானிலை ஆய்வு அமைப்பும் மேலும் 2 அமைப்புகளும் இணைந்து 2000-ம் ஆண்டில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கொண்டுவந்தன. இதன்மூலம் உலகளவில் வானிலை முன்னறிவிப்பாளர்கள், பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொடர்புகொள்ள வசதியாகவும், எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுவதற்கு உதவியாகவும் இந்த முறை கொண்டுவரப்பட்டது. உலகளவில் 9 கடல் மண்டலங்களில் உள்ள நாடுகள் இந்த பெயர்களை வழங்குகின்றன.

இப்போது கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்காளதேசம் வழங்கியுள்ளது. வங்காள மொழியில் ‘ஒகி’ என்றால் கண் என்று அர்த்தம்.

அடுத்த புயலுக்கு இந்தியா பெயர் வழங்கியுள்ளது. அதன் பெயர் ‘சாகர்’. இந்தி வார்த்தையான இதற்கு கடல் என்று அர்த்தம். 

செய்திகள்
செவ்வாய் February 13, 2018

ஐக்கிய நாடுகள் சபையானது 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் திகதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.