புரட்சிகரமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Monday January 01, 2018

எங்கள் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களினதும் புரட்சிகரமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை முதற்கண்தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகில் வாழும் 10 கோடி தமிழன் அடிபட்டு, துன்புற்று, அலைந்தோடி, கண்ணீர் சிந்தி கேட்பார் அற்ற நிலையில்வன்முறைக்கு உட்பட்ட நிலையிலும், அநியாயமாக தமிழர் உயிர்கள் பறிக்கப்பட்டபோது அக்காலச் சூழ் நிலையில்இனப்பற்றுக்கொண்ட ஒரு புரட்சி வீரனாக ஆயுதமேந்தி, வீழ்ந்து விடாத தமிழர் படையாக அணிதிரண்டு ஓயாத புயலாகப்தமிழன் பகையை சுழன்றடித்து மலையாக நிமிரந் த் வராலாற்று; அதிசயத்தை கணமுன்னே நிறுதத் திய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் வழியில், அவரின் உள்ளத்தே உதித்த சிந்தனைகளுக்கு செயல் வடிவம்கொடுத்து உழைத்து வரும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, அதன் 13 ற்கு மேற்பட்ட உபகட்டமைப்புகளுடன்தொடர்ந்தும் தனது மக்களுக்காகவும், தேச விடுதலைக்காகவும், பிறக்கும் 2018ம் ஆண்டில் இன்னும்புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் பிரான்சு வாழ் எம்தேசமக்களின் பங்கிணைவோடு பயணிக்கும் என்பதை புதியஆண்டில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“சமூக நீதியும் சனநாயக சுதந்திரங்களும், தழைத்தோங்கும் ஓர் உன்னத சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதேஎமது அரசியல் இலட்சியமாகும் ’’ என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில்அரசியல் சனநாயக வழியில் தொடர்ந்தும் நம்பிகi; கயோடு இலகi; க எட்டும் வரை சர்வதேசதத் pன் கதவைத் தடடு; வோம்.;

தாயகதத் pல் பல்வேறு அடக்குமுறைக்கு மத்தியில் நம்பிக்கையோடு 300 நாட்களை தொடடு; விடட் மணம் டீ ;புப் போராட்டமும,;காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டமும், புலம் பெயர் மண்ணில் சிறீலங்காவுக் கெதிராக எம்மவர்கள் தொடுக்கின்றஅரசியல் முன்னெடுப்புக்களும், போராட்டங்களும் சர்வதேசத்தின் காதுகளை தொட்டுள்ளபோதும் சர்வதேசம் தனதுபூகோளநலனினைக் கருத்திற் கொண்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காது, தனது தேவைக்கேற்றவாறுநகர்வுகளை மேற்கொள்வதானது தமிழ் மக்கள் மத்தியில் வேதனையை உண்டு பண்ணியிருக்கின்றது. அதேவேளைதமிழீழ மக்களாகிய நாம் தொடர்ந்தும் ஓரணியில் ஒன்றாக ஒரே குறிக்கோளுடன் இனமானப்பற்றாளர்களாக பயணிக்கவேண்டியவர்களாகவே உள்ளோம்.

இந்த காத்திரமான பயணத்தில் தாய்த்தமிழக மக்களுக்கும், உலகெங்கும் வாழும்நம் இளையோர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது.2017 ஆம் ஆண்டிலே நடைபெறற் சில விடயஙக் ளில் முகக் pயமாக தமிழீழ மக்களின் விடுதலைகக்கு   உயிர்விலை. 


கொடுத்து நேர்த்தியாகவும், உண்மையாகவும், அர்ப்பணிப்புடன் போராடிய தமிழழீ மக்களின் ஓரே நம்பிக்கையான தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் அகற்றியமையும், சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பிவரிச்சலுகையை அமெரிக்கா நிறுத்தவுள்ளதான தீரமானமும், எதிர் வரும் மார்ச் மாதம் ஜெனவீரர் மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறீலங்காவின் நல்லாட்சி அரசின் செயற்பாடுகள் பற்றிய காரசாரமான விவாதங்கள் நடைபெறவிருப்பதற்குமத்தியில், தமிழீழ மக்களாகிய நாம் எமது தரப்பால் புதிய ஆண்டில் அனைத்து ராஜதந்திர வழிகளிலும், தாயகம்நோக்கிய முன்னெடுப்புக்களை வீரியத்துடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

சர்வதேச அரசியல் ரீதியில் நடப்பாண்டில் (2017) ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஒரே நாட்டு மக்கள்,  ஒரே இனம், மொழி, ஒரே கலாசாரம், பண்பாடு கொண்ட கட்டலோனியா மாநில மக்கள், தாம் பிரிந்து சென்று வாழ நடத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பானது பெரு வெற்றியை அவர்களுக்கு ஈட்டிக்கொடுத்துள்ளது.


இந்நிலையில், இலங்கைத் தீவிலே இனத்தாலும், மொழியாலும், கலைபண்பாட்டாலும் முற்றிலும் வேறுபட்ட தமிழர்களாகிய நாம் ஏன்பிரிந்து செல்லக்கூடாது என்பதை கட்டலோனியா தேசத்தின் நிலைப்பாட்டை முன்நிறுத்தி பரப்புரைகளை மேற்கொள்ளவேண்டியவர் களாகவுள்ளோம். 

அண்மையில் தொலைக்காட்சிக் கருத்துப்பகிர்வில் புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை பற்றிய
விவாதத்தில் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தில் கூறும்  பாது புலம் பெயர்ந்த தமிழர்கள் 13
லடச் ம் பேர் நாடi; ட விட்டு வெளியேறியதும் தாயகம் பற்றி  எந்த சிந்தனையும் இல்லாமல் இன்னும் வெளியேறுவதிலேயே இருக்கின்றார்கள் என்ற பொருட்படக் கூறியிருந்ததும், தமிழ் மக்களின் வாக்கில் பாராளுமன்ற இடத்தையும், எதிர்கட்சிஆசனத்தையும் பெற்றுவிட்டோம், படிப்படியாக தமிழீழ மக்கள் எமக்குத்தந்த ஆணையை பெற்று விடுவோம் என்றபொய்யான பரப்புரையை செய்து நல்லாட்சி கொண்டு வருவோம் என்று சொன்ன மைத்திரியின் அரசுக்குதுணைபோகின்றவர்கள் 2017 ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற விடயங்கள், 

நம்பிவாக்களித்த தமிழ் மக்களைஎங்கே ஏமாற்றி கொண்டு செல்லுகின்றார்கள் என்பதை கோடிட்டுக் காட்டிநிற்கிறது.கொழும்பில் காலமாகிய யாழ் நாகவிகாரை விகாராதிபதியின் உடலானது தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழ்மக்களின் உணர்வை மதியாது இன, மத நல்லிணக்கத்திற்கு பங்கத்தையும், வெறுப் புணர்வையும் ஏற்படுத்தி யாழ்
மண்ணில் தகனம் செய்யப்பட்டதோடு, தமிழினத்தின் இருப்பை மறுதலித்து பல்வேறு சொல்லாடலில் புதிய அரசியல்யாபபு; தயாரிகக் ப்படடு; இலங்கைத் தவீ னது சிஙக் ளவர்களுககானதே என்பதை சொல்லிலும் இச் செயலிலும் காட்டியிருகின்றது பௌத்த சிங்கள தேசம். தாயகத்தில்தான் இந்த நிலையென்ற போதும் புலம்பெயர் தேசத்திலும் தமதுஇனவிரோத கரங்களைப் பரப்பி தமது இருப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ள நாடுகளில் தமது தூதரகங்கள் மூலம் மைத்திரியின் அரசினால் தமிழர்களுக்கு நல்லது செய்வதாக கூறி மக்களை குழப்புவதிலும், அதற்கு எம்மவர்களை உடந்தையாக்கி எவ்வித எதிர்பார்ப்புமின்றி தேசத்திற்காகவும், அந்த மக்களுக்காகவும், நாளைய சந்ததியின் சுதந்திரவாழ்வுக்காகஅர்பணிப்புடன் உழைப்பவர்கள் மீது பழிசுமத்துதல், களங்கமுறச்செய்தல், ஒற்றுமையீனத்தையும்,ஏற்படுத்தி நெருக்கடிகளை உண்டாக்குவதிலும் ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் வீரியமான கட்டமைப்புக்களைஉடைக்கும், குழப்பும், செயற்பாடுகளையும் எம்மவர்களைக் கொண்டே அனைத்து நாடுகளிலும் செய்து வருகின்றது.
இதில் பிரான்சு நாடானது மற்றைய நாடுகளை விட அதிகமான இடர்களையும், நெருக்கடிகளையும் சந்தித்தபோதும் துன்பங்கள் துயரங்கள் யார் தந்தபோதும் இன்பங்களையும், நிம்மதியையும், சந்தோசங்களையும், சுதந்திரத்தையும் மட்டுமே சேர்த்து வைப்போம் என்ற வகையில் தலைவரின் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளைகளாக, அனை வரையும்
இணைத்து இலக்கை ஓர்நேர்கோட்டில் அடையவே நாங்கள் எல்லோரும் உண்மையாகவும், மாவீரர்களுக்கு நம்பிக்கையாகவும், அவர்கள்   உறுதியெடுத்து எமது மக்களினதும், இளையவர்களின் பங்களிப்போடு அனைத்து பணிகளையும் ஒருங்கமைத்து வீரியத்துடன் தொடர்ந்து கொண்டு செல்லுவோம்.

புதிய ஆண்டு எமது மக்களுக்கும், எமக்கு கரம் கொடுத்து எம்மை அரவணைத்து வரும் பிரான்சு தேசமும், மக்களும் சந்தோசமாகவும், சுதந்திரமாகவும், நினைப்பவை எல்லாமே வெற்றியாக அமைய புதிய ஆண்டினை நம்பிக்கையோடு வரவேற்று, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி
 தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்சு