புறக்கோட்டையில் சந்தேகநபர் தற்கொலை! ஆணைக்குழு விசாரணை!

Sunday January 14, 2018

புறக்கோட்டை காவல் துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

 காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட கைதி உயிரிழந்தமை தொடர்பில் சுயாதீன பொறிமுறையின் கீழ் விசாரணை செய்யுமாறு  காவல் துறை மா அதிபரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறினார். 

புறக்கோட்டை - பெஸ்தியன் மாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை (10) இரவு கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார். 

இதனையடுத்து புறக்கோட்டை  காவல் துறை  நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.