புற்றுநோயைத் தடுக்கும் பூசணி!

ஒக்டோபர் 14, 2017

பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவை புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவை, இவை நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் திறன் படைத்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவை புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவை, இவை நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் திறன் படைத்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வை அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென் ஹூயாஸ் ஆகியோர் நடத்தினர்.

வெள்ளரி வகையைச் சேர்ந்த இந்தக் காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் இலைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் மருந்துகளில் இந்தியர்களும், சீனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இவர்கள் வெள்ளரி வகை காய்கறிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இக்காய்களில் பி.ஐ., பி.டி. என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகள் சிறப்புத் தன்மையுடன் உள்ளன.

இவை, புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் படைத்தவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

செய்திகள்
செவ்வாய் யூலை 17, 2018

தமிழி எழுத்துரு வரைய சந்தர்ப்பம் கிடைத்து வெளியிட்டோம். இதில் என் பங்கு வரைபட உதவி மட்டுமே.

ஞாயிறு யூலை 01, 2018

ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது.