புலம்பெயர் தேசத்தில் அரச உயர் பதவில் அமர்ந்த ஈழத்துப் பெண்மணி!

செப்டம்பர் 12, 2018

ஈழ தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.35 வயதான சுபா உமாதேவன், மூன்று ஆண்டுகள் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

ஜெனிவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் மற்றும் சர்வதேச சட்டம் தொடர்பான சிறப்பு முதுகலை பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.கனடாவின் ஒட்டாவாவில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகள் மற்றும் நவீன மொழிகள் தொடர்பான பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.பெண் வர்த்தகர்களுக்கான சர்வதேச அமைப்பின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் சுபா உமாதேவன், யுனைஸ்கோ அமைப்பு ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் சர்வதேச திட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறார்.
 
தனது புதிய பதவி தனது இதயத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் சார்ந்தது என சுபா உமாதேவன் கூறியுள்ளார். நான் ஒரு அகதி சிறுமியாக இருந்துள்ளேன். எனக்கு எதிராக எப்படியான பாகுபாடுகள் இருந்தது என்பதை அறிவேன்.

எனது உரிமைகளுக்காக போராட எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. இளையோர் மற்றும் பெண்கள் ஒதுக்கப்பட்ட குழுவிற்கு உரியவர்கள் என்பதை நான் ஆரம்பத்திலேயே அறிந்திருந்தேன்.தனது அமைப்பின் பிரதான செயல் அதிகாரி தன் மீது மரியாதை வைத்துள்ளதாகவும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் நிறுவனம் என்ற வகையில் அதனை ஊக்கப்படுத்தவும் விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க போவதாகவும் சுபா கூறியுள்ளார்.

புதிய முகாமைத்துவப் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள சுபாவுக்கு முன்னாள் அந்த பதவியில் இருந்த Jan Schneider தீர்க்கமான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார். சுபா தற்போது புதிய சவாலை எதிர்நோக்கியுள்ளார்.சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட அமைப்பு சர்வதேச ரீதியில் 75 நாடுகள் 1.5 மில்லியன் சிறுவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் வறுமையில் இருந்து மீள உதவிகளை வழங்கி வருகிறது.

இதேவேளை, சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட அமைப்புகடந்த 80 ஆண்டுகளாக பெண் பிள்ளைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.