புலம்பெயர் தேசத்தில் சிங்கள இனவாதத்தின் மீண்டுமோர் உளவியல் முகம்

செவ்வாய் ஏப்ரல் 26, 2016

 இத்தாலி தமிழர் ஒன்றியம்

ஊடக அறிக்கை . புலம்பெயர் தேசத்தில் சிங்கள இனவாதத்தின் மீண்டுமோர் உளவியல்  முகம்-இத்தாலி 

இத்தாலி தமிழர் ஒன்றியத்தின் அனுசரணையுடன்,இத்தாலி மேற்பிராந்திய ஈழத்தமிழர் விளையாட்டுத்துறையால் தியாகி பொன்.சிவகுமாரின் ஞாபகர்த்தமாக பொலோனிய மாநகரில் இன்று நடைபெறவிருந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள்,சிங்கள இனவாதத்தின் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் இடைநிறுத்தப்பட்டது.
 25/04/2016 இன்றைய நாள் இத்தாலியானது  அடக்குமுறையிலிருந்து  விடுதலையடைந்து 71வது ஆண்டு.இன்றைய நாளில் எமது விளையாட்டுப்போட்டிகளை நாம் நடாத்துவதற்கு வழமைபோல் திட்டமிட்டு அதற்கான அனுமதிகள் பெற்று,இத்தாலி மேற்பிராந்தியத்தின் சகல மாநிலங்களிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத்திடலில் அணிதிரண்டு ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பிக்கும்   நிலையில்,சிங்கள இனவாதிகள் அதற்கு முன்னால் அணிதிரண்டு பலத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக தமிழீழ தேசியக்கொடியை குறிவைத்து தமது முழுமையான எதிர்ப்பை முடிக்கிவிட்டனர்.


 இதற்கான ஒழுங்குகள் சிங்களத்தினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தொழிநுட்ப வசதிகலூடாக பரப்புரை செய்யப்பட்டுள்ளது.அப்பரப்புரையில் சிங்களம் விளம்பரப்படுத்திய விளம்பரத்தில் தமிழர்களின் ஒன்றுகூடல்களை  கடந்தகாலத்தைப்போல் தாம் அனுமதிக்ககூடாதென்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை முறியடிக்க சிங்கள தேச புத்திரர்கள் அணிதிரளுமாறு என அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அதனடிப்படையில் ஒன்று திரண்டு  இனவாத சிங்களவர்கள் எதிர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நிலைமையை அறிந்த காவல்த்துறையினர் அவ்விடத்திற்க்கு  விரைந்து வந்து நிலைமையை சீர் செய்ய முற்பட்டனர்.எம்மை அவர்களுடன் கதைக்கும்படி கேட்டுக்கொண்டனர் அதற்கு நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்,எம்மை கொன்‍‌றொழித்து,இனவழிப்பில் ஈடுபடும் இவர்களுடன் கதைக்க நாம் தயாரில்லை என்று கூறியதுமட்டுமல்லாது அமரர் சிவகுமாரன் யார் என்ற விளக்கத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தோம்.

 இறுதியில் இன்று  இத்தாலியின் 71வது விடுதலை நாள் என்ற படியாலும்,தமிழீழ தேசியக்கொடி ஏற்றாமல் விளையாட்டை ஆராம்பிக்கமுடியாது என்ற காரணத்தினாலும் விளையாட்டை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.இம்முடிவுகளுக்கு  தமிழீழ விளையாட்டு கழகங்கள் அனைத்தும் முழுமையான தமது ஒத்துழைப்பை வழங்கியது மட்டுமல்லாது,மக்களும்,கழகங்களும்  தமது நீண்டதூர பயணம்,பொருளாதாரம்,என்ற  அனைத்து சுமைகளையும் தமிழீழ தேசியக்கொடிக்காகவும் ,மாவீரர்களுக்காகவும்,எமது மக்களுக்காகவும்  சிறுபொருட்டாக எண்ணி இலட்சிய பற்றுடன் நின்று எதிரியின் உளவியல் போருக்கு சரியான பதிலடி கொடுத்தார்கள் இதற்கூடாக சிங்கள தேசத்திற்கு நாம் சரியான பதிலை கொடுத்துள்ளோம்,தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்பதே  இன்றைய சிங்களத்தின் எதிர்ப்பானது, திடீர் என்று தோன்றியதாக கருத முடியாது

இது சிங்களதேச பேரினவாத அரசினால் புலம் பெயர் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் திட்டமிடப்பட்ட உளவியல்  போர் என்பதனை நாம் அனைவரும் நன்கறிவோம்.எனவே  நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த உளவியல் போரை முறியடிப்போம்.
நன்றி 
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் 
இத்தாலி தமிழர் ஒன்றியம்