புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் வெளியீடு – டென்மார்க்

புதன் நவம்பர் 21, 2018

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் 17. 11. 2018 சனிக்கிழமை மாலை டென்மார்க்கின் Ikast இல்  ஆதிலட்சுமி சிவகுமாரின் புள்ளிகள் கரைந்தபொழுது நாவலின் வெளியீட்டுவிழா சிறப்புற நடைபெற்றது. நிகழ்வில்

மாலதி கலைக்கூட கல்விப் பகுதிப் பணியாளர் திருமதி. சுஜாதா அவர்களின் வாழ்த்துரையை அடுத்து, நாவலாசிரியரையும்  நாவலையும் அறிமுகம் செய்து, டென்மார்க்கில் வசிக்கும் இணுவையூர் கவிஞர் திரு. வ. க. பரமநாதன் அவர்கள் அறிமுக உரை ஆற்றினார். 

நாவலுக்கான ஆய்வுரையை டென்மார்க் கல்வியாளர் திருமதி மல்லீஸ்வரி ஆதவன் அவர்களும்,  உளவியல் நோக்கில் நாவலின் சிறப்பை உரைக்கும் உரையினை உளநல மருத்துவர் திரு.  கதிர்காமநாதன் அவர்களும் நிகழ்த்தினர். இவர் தனது உரையில் இந்த நாவலை டெனிஸ் மொழியில் வெளியிடவேண்டும் என்பதனை வலியுறுத்தினார். 

தொடர்ந்து நாவலின் படிகளை நாவலாசிரியர் வெளியிட்டதுடன், தன்னுரையையும் ஆற்றினார். 
ஆர்வலர்களும்,  பற்றாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.