பூஜித் ஜயசுந்தரவுக்கு அழைப்பு!

சனி சனவரி 12, 2019

காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவல் துறை மா அதிபருக்கு அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு முதற்தடவையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்ககான சதித்திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.