பூட்டான் குட்டி இளவரசருக்கு நாளை பிறந்தநாள்

சனி பெப்ரவரி 04, 2017

பூட்டான் குட்டி இளவரசரின் முதலாவது பிறந்தநாளையொட்டி மனதை கொள்ளை கொள்ளும் புதிய புகைப்படம் மற்றும் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள குட்டி நாடு பூட்டான். அரசர் ஜிக்மே கெசார் நம்கெய்ல் வாங்சக் (வயது 36) பூட்டானை ஆட்சி செய்து வருகிறார். 

உலகிலேயே இளம்வயது அரசர்களில் இவரும் ஒருவர். ராணி பெயர் ஜெட்சன் பெமா (வயது 25). இந்த அரச தம்பதியருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. குட்டி இளவரசன் பிறப்பு மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பூட்டான் மன்னர்களை டிராகன் அரசர்கள் என்றும், ராணிகளை டிராகன் ராணிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எனவே, இளவரசன் டிராகன் இளவரசன் என அழைக்கப்படுகிறார். இந்த குட்டி டிராகன் இளவரசனின் முதலாவது பிறந்த நாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.