பூமிக்கு அடியில் வாழும் கிராமம்!

வெள்ளி டிசம்பர் 23, 2016

உலகில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட காலநிலை மாற்றங்கள் மக்களின் வாக்கை போக்கையும் மாற்றி அமைக்கின்றன. அந்தவகையில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் காரணமாக அவுஸ்திரேலியாவில் அடிலெய்டில் சேர்ந்த கூபர் பேடி எனும் இடத்தில் மக்கள் பூமிக்கு அடியில் வாழ ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 45 டிகிரி வரை செல்லும் வெப்ப காலத்தில் 4000 பேருக்கு மேற்பட்டோர் பூமிக்கு அடியில் சென்று விடுகின்றனர்.குறித்த பகுதி முன்னொரு காலத்தில் மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்கமாக இருந்துள்ளது

மேலும் இங்கு வாழும் மக்களுக்கு மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்க வேலை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இணையாக சுற்றுலா மூலமாகவும் வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

இங்கு விடுதிகள் , உணவகங்கள் , பார், தேவாலயங்கள் , வீடுகள் என எல்லாமும் உண்டு. இருப்பினும் இங்கு தண்ணீர் கொண்டு வருவது தான் சற்று கடினம். இதற்கான பம்ப் மூலமாக 24 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இவ்விடத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.