பூமியின் மையப்பகுதியில் சிலிக்கன்

புதன் சனவரி 11, 2017

பூமியின் மையப்­ப­கு­தியில் இது­வரை இனங் காணப்­ப­டாமல் இருந்த மூலகம் ஒன்றை தாம் கண்­டு­பி­டித்­துள்­ள­தாக ஜப்­பா­னிய  விஞ்­ஞா­னிகள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர். இது சிலிக்கன் மூலக­மா­க­ இருக்­கலாம் என அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.
 
பூகோ­ளத்தின் மையப்­ப­கு­தியில், இரும்பு மற்றும் நிக்­க­லுக்கு அடுத்­த­தாக இருக்­க­கூ­டிய மூலகம் எது என்­பதை அறி­வது தொடர்­பாக பல தசாப்­தங்­க­ளாக  விஞ்­ஞா­னிகள்            ஆய்­வு களை   மேற்கொண்டு வந்­தனர்.

இந்­நி­லையில் பூமியின் மத்­தியில் உள்­ளதைப் போன்ற உயர் அழுத்தம், அதி வெப்­ப­நிலை கொண்ட மாதி­ரி­களை  உரு­வாக்கி மேற்­கொண்ட சோத­னை­களின் மூலம், மேற்­படி மூலகம் சிலிக்­க­னாக இருப்­ப­தற்­கான வாய்ப்பு அதி­க­மாக உள்­ளது என ஜப்­பா­னிய விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர்.
 
பூமியின் மத்­திய பகு­தியில் சுமார் 5 சத­வீதம் சிலிக்கன் இருக்­கலாம் என நாம் நம்­பு­கிறோம் என டொஹோகு பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த தலைமை ஆராய்ச்­சி­யாளர் எயி ஒஹ்ட்­டனி தெரி­வித்­துள்ளார்.
 
பூமி உரு­வாக்­கப்­பட்ட விதம் குறித்து மேலும் சிறப்­பாக அறிந்­து­கொள்­வ­தற்கு இக்­ கண்­டு­பி­டிப்பு உதவும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. பூகோ­ளத்தின் உட்­பு­றத்­தி­லுள்ள மையப்                   ­ப­கு­தி­யா­னது 2400 கிலோ­மீற்றர் விட்டம் கொண்ட உரு­ளை­யாக உள்­ளது.
 
அப்­ ப­கு­தியில் நேர­டி­யாக ஆய்­வு­களை மேற்­கொள்ள முடி­யாது. இதனால், அப்ப­கு­தி­யி­லி­ருந்து வெளி­யாகும்  கதிர்­வீச்­சு­களை அடிப்­ப­டை­யாக வைத்து ஆய்­வு கள் மேற்         கொள்­ளப்­ப­டு­கின்­றன.