பெங்களூரு பள்ளியில் புகுந்த சிறுத்தை தாக்கி 4 பேர் காயம்

திங்கள் பெப்ரவரி 08, 2016

பெங்களூரு வர்த்தூரில் அமைந்துள்ளது விப்கையார் ஆங்கிலப்பள்ளி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று பள்ளி மூடப்பட்டிருந்தது.  காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பள்ளியின் முன்வாசல் வழியாக சிறுத்தை  நுழைந்தது. இதை அறியாத பாதுகாவலர் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வழக்கம்போல் சோதனை செய்தார். அப்போது பள்ளியின்  நுழைவாயிலில் இருந்த சி.சி.டி.வி கேமரா ஒன்றில், சிறுத்தை செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே  வர்த்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வனத்துறையினரை வரவழைத்து, சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதை புகைப்படம் எடுக்க சிலர்  முற்பட்டபோது அது கோபத்தில் சீறி தாக்கியது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை மீது மயக்க ஊசி  செலுத்தி அதை பிடித்து கூண்டில் அடைத்து பின்னர் உயிரியல் பூங்காவில் விட்டனர். சுமார் 14 மணி நேரம் போராடி சிறுத்தையை பிடித்தது  குறிப்பிடத்தக்கது.

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));Leopard prowls Indian school

A leopard has been spotted on CCTV prowling the halls of a school in India before attacking a man on the grounds.The animal was tranquilised late in the evening after a large scale operation to capture the big cat.

Posted by Channel 4 News on Sunday, February 7, 2016