பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு 18 மாதங்கள் சிறை

யூலை 16, 2017

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு 18 மாதங்கள் சிறைக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஓலண்டா ஹூமாலா மற்றும் அவரது மனைவி நடின் ஹெரடியா மீது சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற விசாரணைகளையடுத்து, இவ்விருவரையும் சிறைக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டிலிருந்து இவர்கள் தப்பிச்செல்வதை தடுக்கும் பொருட்டும், வழக்கில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும் இந்த தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3 வருடங்களின் பின்னர் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்