பெல்ஜியம் கதிரைகளுக்கு தடை!

Thursday September 13, 2018

பெல்ஜியம் நாட்டிலிருந்து மேல் மாகாண சபைக்கு ஆசனங்களை கொள்வனவு செய்ய மேல் மாகாண ஆளுநர் ஹேமக்குமார நாணயக்கார தடை விதித்துள்ளார்.மேல் மாகாண சபைக்கு தலா 6 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 125 கதிரைகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு மேல் மாகாண ஆளுநர் ஏற்கனவே கோரிக்கையொன்றை விடுத்திருந்த நிலையிலேயே இன்று ஆசனக்கொள்வனவுக்கு தடை விதித்துள்ளார்.

மேல் மாகாண சபையின் புதிய கட்டடப் பகுதியின் சமய மண்டபத்துக்காக தலா 6 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 125 கதிரைகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்திய நிலையில், முறையான ஆய்வுகளின்றி அதிக விலைக்கு கதிரைகள் கொள்வனவு செய்யப்படுவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தது.

இதேவேளை, குறித்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.