பேரறிவாளனை புழலுக்கு மாற்று​மாறு கோரிக்கை!

June 18, 2017

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டணை பெற்ற பேரறிவாளனுக்கு, சென்னையில் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, அவரை புழல் சிறைச்சாலைக்கு மாற்றுமாரி கோரி, பேரறிவாளனின் தாயாரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில்,  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

26 வருடங்களாக சிறையிலுள்ள பேரறிவாளன், இரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுவதால், அவர் சென்னைக்கு, அவ்வப்போது சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகின்றார். இந்நிலையில், பேரறிவாளனை புழல் சிறைக்கு மாற்றுமாறு, அவரது தாயார் அற்புதம்மாள், அமைச்சர் கே.சி.வீரமணியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது வேலூர் சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்குச் சிகிச்சையளிக்க அங்கு வசதி இல்லை என்று, சிறைத்துறை மறுத்துவிட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார். இதனால், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னை புழல் சிறைக்கு மாற்றி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடத்துள்ளார்.

மேலும், பேரறிவாளனின் பரோல் மனுவையும் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை புழல் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
வெள்ளி May 18, 2018

போர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன.