பேராசிரியர் François Houtart அவர்களுக்கு எமது இறுதி வணக்கம்

June 09, 2017

 சமூக நீதிக்காகவும் அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்ட மக்களுக்காகவும்,  தனது இறுதி மூச்சுவரைக்கும் உழைத்த  மாபெரும் மனிதர்  பேராசிரியர்   François Houtart அவர்கள் 06.07.2017 அன்று தனது 92 அகவையில் இறைபாதம் அடைந்தது ஈழத்தமிழர்களுக்கு  பேரிழப்பாகவும்.  2008 ம்  ஆண்டு இறுதி நாட்களில் தாயகத்தில் எமது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது   இப்படுகொலையை தடுத்து நிறுத்த பேராசிரியர்   François Houtart அவர்கள் தனது முழு முயற்சியை எடுத்ததை ஈழத்தமிழர்கள் என்றென்றும்  மறவார்கள். ஈழத்தமிழர்கள் மீது நடைபெற்றது இனவழிப்பு என்பதை அங்கீகரித்த உலக அறிஞர்களில் முதன்மை இடத்தை பேராசிரியர்   François Houtart அவர்கள் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சர்வதேச மனிதவுரிமை அமைப்பு - பிரேமன் மற்றும் இலங்கையில் சமாதானத்துக்கான ஐரிஸ் பேரவையுடன் இணைந்து  ஈழத்தமிழர்கள் தொடர்பான இரு  நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தை ஒழுங்கமைக்க  காரணகர்த்தாவாக விளங்கியவரும், டப்ளின் தீர்ப்பாயத்தில் தலைமை நீதிபதியாகவும்   பேராசிரியர்   François Houtart கடமையாற்றியது வரலாற்றுப் பதிவாகும்.
 
தனது இறுதி நாட்களிலும் தள்ளாத வயதில் Quito, Ecuador நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி  ஈழத்தமிழர்கள் இனவழிப்பு தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கிலும் பேராசிரியர்   François Houtart அவர்கள்  கலந்துகொண்டது ஈழத்தமிழர்கள் மீது அவர் வைத்திருந்த கரிசனையையும் , தோழமையையும் மனிதநேயத்தையும் உறுதிப்படுத்துகின்றது. 

பேராசிரியர்   François Houtart அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையாகிய நாம் எமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் அவர்  எமது இனத்துக்காக சர்வதேச அரங்கில் ஒலிப்பிய குரல் எமது செவிகளில் தொடர்ந்து விடுதலையை நோக்கி முன்நகர்த்தும்  என்பதை இத்துடன் உறுதிப்படுத்துகின்றோம்.  

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை.

செய்திகள்
புதன் February 21, 2018

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு