பேராதனை பல்கலைக்கழகம் திங்கட்கிழமை ஆரம்பம்!

Saturday August 11, 2018

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று கூடிய பேராதனை பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க கூறினார். 

எனினும் அந்தந்த பீடங்களின் பாடநெறிகள் ஆரம்பமாகும் நாட்கள் குறித்து அந்தந்த பீடங்களின் பீடாதிபதிகள் தீர்மானிப்பதற்கும், அது தொடர்பில் மாணவர்களுக்கு பீடாதிபதிகள் அறிவிப்பார்கள் என்றும் பேராசிரியர் உபுல் திசாநாயக்க கூறினார்.