பேருந்தின் அடியில் ஒளிந்து 80 கி.மீ பயணம் செய்த 2 சிறுவர்கள்!

நவம்பர் 28, 2017

சீனாவில் பேருந்தில் பயணம் செய்ய பணம் இல்லாததால் பேருந்தின் அடியில் இருந்த பெட்டி போன்ற பகுதியில் அமர்ந்து 2 சிறுவர்கள் 80 கி.மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர்.

சீனாவில் தென்குவாங்ஸி பகுதியில் மிகவும் ஏழ்மையான கிராமங்கள் உள்ளன. அங்கு வாழ்பவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை காப்பாற்ற குவாங்டங் மாகாணத்துக்கு சென்று பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் குவாங்ஸி பகுதியை சேர்ந்த 2 ஏழை சிறுவர்கள் குவாங்டாங்கில் பணிபுரியும் தங்களது தாய், தந்தையை பார்க்க விரும்பினர். அதற்காக பள்ளியில் இருந்து வெளியேறினர்.

பஸ்சில் பயணம் செய்ய பணம் இல்லாததால் அதன் அடியில் இருந்த பெட்டி போன்ற பகுதியில் அமர்ந்து பயணம் செய்தனர். அதுபோன்று 80 கி.மீட்டர் தூரம் (50மைல்) பயணம் மேற்கொண்டனர்.

இதற்கிடையே நிறுத்தத்தில் நின்றபோது பஸ்சின் அடியில் ஊழியர்கள் பார்த்த போது அவர்கள் அமர்ந்து இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டனர். அந்த சிறுவர்களுக்கு 8 முதல் 9 வயது இருக்கும். உடல் முழுவதும் கரும்புகையும், சேரும், சகதியுமாக இருந்தது. சிறுவர்கள் 2 பேரும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

செய்திகள்
சனி August 18, 2018

கேரளாவில் நூறாண்டு காணாத வெள்ளத்தால் அதிகமான உயிர்பலி