பேர்லின் அம்மா உணவு விநியோகத்தின் தொடரும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவிகள்!

Wednesday July 25, 2018

எமது மக்களை நாமே வாழவைப்போம்.- பேர்லின் அம்மா உணவு விநியோகத்தின்  தொடரும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் 

பேர்லின்  அம்மா உணவு விநியோகம்  கடந்த 5 ஆண்டுகளாக தாயக மக்களுக்கு தமது தொடர்ச்சியான உதவிகளை செய்துவருகின்றதை அனைவரும் அறிந்ததே.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் இவ் வாரம் மட்டக்களப்பில் 100 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மாணவர்களுக்கான உதவிக்கருத்தரங்குக்கான அனுசரணையை அம்மா உணவு விநியோயகம்  முன்னெடுத்திருந்தது. 

அத்தோடு குறிப்பிட்ட  மாகாணத்தில் அங்கு உள்ள ஒரு கிராமத்தில் மக்களுக்கு பொதுக் கழிவறை அமைப்பதற்கும் அம்மா உணவு விநியோகம்  தனது சேவையை ஆற்றியுள்ளது. 

மட்டக்களப்பு மாகாணத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட சகோதரனுக்கு சிகிச்சைக்கான ஒரு பகுதி சிறிய உதவியையையும் மற்றும் வறுமைக்கோட்டுக்கு  கீழே உள்ள ஒரு குடும்பத்திற்கான சுயதொழிலையும் அம்மா உணவு விநியோகம் வழங்கியுள்ளது. 

இத் திட்டங்களை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு அமைப்பாளர் திரு சுரேஷ் அவர்கள் தலைமைதாங்கி நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

பரிசன்குளம் , கனகராயன்குளம் , மதியாமடு மற்றும் கனகராயன் குளம் கிராமங்களில்   அம்மா உணவகத்தின் அனுசரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்விப்பிரிவின் ஒழுங்கமைப்பில் கல்விநிலையங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

எமது மக்களை நாமே வாழவைப்போம். 

அம்மா உணவு விநியோகம்  -  பேர்லின்