பேஸ்புக் தடைக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம் - உதய கம்மன்பில எச்சரிக்கை

March 13, 2018

பேஸ்புக் தடைக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளைத் திரட்டி வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார். 

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக் கூறுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினத்துடன் (புதன்கிழமை) அவசரகாலச் சட்டமும் நீக்கப்படவுள்ளது. ஆனால் பேஸ்புக் மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை.

இனவாத முறுகலை தடுப்பதற்காக என்று கூறிக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முற்படுகிறது. இந்த தடை எவ்விதத்திலும் நடைமுறைச் சாத்தியமில்லை. 

தற்போது இளைஞர், யுவதிகள் திருட்டுத்தனமாக பேஸ்புக் பயன்படுத்த நேர்ந்துள்ளது. வெறுப்பு பிரசாரங்களை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கூறி அதனை தடை செய்துள்ளமை வேடிக்கை எனவும் உதய கம்மன்பில கூறினார்.

செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், ம

திங்கள் யூலை 16, 2018

இலங்கையில் இன்று ஜனநாயகம் இழக்கப்பட்டு சர்வாதிகாரமும் இராணுவஆட்சியும் தலைதூக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள் யூலை 16, 2018

சீரற்ற காலநிலை காரணமாக மும்பாய் மற்றும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு பயணிகள் விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்டுள்ளது.