பேஸ்புக் மெசன்ஜர் அப்டேட்!

Thursday November 23, 2017

பேஸ்புக் மெசன்ஜர் செயிலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனையை போக்கியுள்ளது.

பேஸ்புக் மெசன்ஜர் செயலியில் புதிய அப்டேட் 4K ரெசல்யூஷன் தரத்தில் புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி, திரும்ப பெறும் வசதியை வழங்கியுள்ளது. இத்துடன் பேபால் சப்போர்ட், புதிய ஃபில்ட்டர்கள், ஸ்டிக்கர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய அப்டேட் புகைப்படங்களை அதிக தரத்தில் பரிமாற்றம் செய்யும் என்பதால் முந்தைய அப்டேட்டில் குறைந்த தரமுள்ள புகைப்படங்களை பகிர்ந்து வந்த பிரச்சனை இனி இருக்காது.

தகவல் பரிமாற்றத்திற்கு எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் புகைப்படங்கள் மற்றும் எமோஜி என பல நிறங்களில் தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். புதிய அப்டேட் மூலம் மெசன்ஜர் செயலியில் 4K ரெசல்யூஷன் புகைப்படங்கள் அல்லது 4096x4096 தர படங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

தற்தமயம் விற்பனையாவதில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான ரெசல்யூஷன் இதுவாகவே இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மெசன்ஜர் செயலியில் 1700 கோடி புகைப்படங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், புதிய அப்டேட் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.

குறைந்த தரம் கொண்ட புகைப்படங்களை அனுப்பும் போது மெசன்ஜரில் இருந்த அதே வேகத்திலேயே 4K புகைப்படங்களும் அனுப்பப்படுகின்றன. வழக்கமான வேகத்தில் அதிக தரமுள்ள புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதால் புகைப்படத்தை சூம் செய்து தெளிவாக பார்க்க முடியும்.

மெசன்ஜர் செயலியில் 4K தரத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முதலில் மெசன்ஜர் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். புதிய அப்டேட் பெற்ற செயலியில் முன்பை போன்றே புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய மெசன்ஜர் அப்டேட் முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சிங்கப்பூர், ஹாங் காங், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மேலும் பல நாடுகளில் இந்த அம்சம் வழங்கப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.